×

டேங்க் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

பண்ருட்டி, பிப். 17:  தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில மாநாடு ஒன்றிய ஆயத்த கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சாமிதுரை, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் சபா பாலமுருகன், துணை தலைவர் ரேவதி ஆடலரசன், மாநில தலைவர் ராமர் ஆகியோர் மாநாடு பற்றி விளக்கி பேசினர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒன்றியத்தின் கவுரவ தலைவர் ஆனந்ததுரை கலந்து கொண்டு பேசினார். ஊராட்சியில் பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், நிலுவை தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 அளிக்கப்பட வேண்டும். வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு குறைந்தபட்சம் ரூ.18,500 வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பிடிஓக்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tank operators ,
× RELATED கிராம ஊராட்சி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்